கடலூாில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூாில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-10-21 20:34 GMT

அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிடும் வகையில் ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். குறைந்த பட்ச கருணை ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 1.4.2023 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களின் இருப்பு குறைவுக்கு 3 மடங்கு அபராத தொகை வசூலிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கந்தவேல், வேல்முருகன், சுப்புராயன், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பழனிவேல் தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம், சி.ஐ.டி.யு. மாநில துணை செயலாளர் கருப்பையன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்