காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சேரன்மாதேவியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேரன்மாதேவி:
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இதனை கண்டித்தும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் பொன்ராஜ், வட்டார தலைவர்கள் ராமச்சந்திரன், தனசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் முருகன் ரவிச்சந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட மனித உரிமைகள் கழக தலைவர் ராம்சிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் முகமது மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.