காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-27 19:47 GMT

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நகர தலைவர் இப்ராகிம்பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வடகாடு முக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராம.சுப்புராம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆலங்குடி பேரூர் நகர செயலாளர் அரங்குளநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்