காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாசுதேவநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-06-27 15:25 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், பாரதிய ஜனதா அரசால் கொண்டு வரப்பட்ட அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் சங்கை.கணேசன் தலைமை தாங்கினார். புளியங்குடி நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் பால்ராஜ், வாசுதேவநல்லூர் நகரத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்