காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அம்பையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-24 19:32 GMT

அம்பை:

அம்பை நகர காங்கிரஸ் சார்பில், ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், மாநில பேச்சாளர் பால்துரை, வி.பி.துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்