காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதை கண்டித்து இந்நகர் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜாசொக்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் சாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.