காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-06-17 15:39 GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத் துறையை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வு.மான ராஜகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில், பழிவாங்கும் நோக்கில் ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜம்பு கென்னடி, மூங்கில் ராமலிங்கம், வடவீரபாண்டியன், நகர பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு வட்டார தலைவர் அன்பழகன் நன்றி கூறினார்.









Tags:    

மேலும் செய்திகள்