காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-15 16:29 GMT

சீர்காழி

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன், ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து பேசினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மீது பொய் வழக்குபோடும் அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், அன்பு, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









Tags:    

மேலும் செய்திகள்