காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திங்கள்சந்தை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-13 17:11 GMT

திங்கள்சந்தை, 

காங்கிரஸ் தலைவர்கள் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்வதாகவும், பா.ஜனதா அரசினை கண்டித்தும் குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று காலையில் திங்கள்சந்தை அருகே உள்ள பிலாக்கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர், குருந்தன்கோடு வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி, திங்கள்சந்தை பேரூராட்சி தலைவர் சுமன், கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்