காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-26 18:51 GMT

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்தும், இந்த சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசு ராஜினாமா செய்யக்கோரியும் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஐக்கிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் விராலிமலை சோதனைச்சாவடியில் பா.ஜ.க. அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் தலைமையில் மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்