கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-19 20:07 GMT

அகில இந்திய கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் இருதயராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சாம்ராஜ், மாநில அமைப்பாளர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்கள்.

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் கொடூரமாக தாக்கப்படுவது, கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சார்லஸ், துணைச்செயலாளர் ரத்தினராஜ், இணைச்செயலாளர் கிங்ஜோஸ்வா ராஜ், அலெக்ஸ் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்