பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, பா.ஜ.க. பட்டியல் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூரில் பா.ஜ.க. நிர்வாகி தடா பெரியசாமி மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மரக்காமலை ராஜா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.