பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வலியுறுத்திகடலூரில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வலியுறுத்தி கடலூரில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-26 20:03 GMT


தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து வழங்கக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாவட்ட தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் வடுக்குமாங்குடி சீனுசங்கர் வரவேற்றார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசன், ரகுபதி, மாநகர தலைவர் வேலு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் ரமேஷ்கோவிந்த், மாநில செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜெனித்மேகநாதன், விவசாய அணி பவானி, கார்த்திகேயன், பரமத்மா, ஆனந்த், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் கையில் பன்னீர் கரும்புகளுடன் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்