பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீமுஷ்ணம்,
பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும், கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன், மாநில ஓ.பி.சி. அணி தலைவர் சாய் சுரேஷ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ், விவசாய அணி செயலாளர் வெங்காடசலம், மாவட்ட விவசாய அணி தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.