பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பா.ஜ.க. தலைமை அறிவித்தபடி விருதுநகரில் சாத்தூர் ரோடு சந்திப்பில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் ராமஜெயம் தலைமையில் பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி தலைவர் உமாரதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெற்றிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், நிர்வாகிகள் சந்திரசேகரன், காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.