தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் ழுமுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். மேலிட பார்வையாளர் முரளிகணேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டிதுரை, கர்ணன், பெரியநாயகி, பொருளாளர் விநாயகம், பொதுச்செயலாளர்கள் வீரசிங்கம், நமசுராஜா, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்புமுருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மண்டல தலைவர்கள் ரமேஷ், பாலமுருகன், சக்திவேல், சந்திரமோகன், பா.ஜ.க. துணைத்தலைவர்கள் பஞ்சாட்சரம், தனலட்சுமி, மாவட்ட செயலாளர்கள் அம்ரித்ராஜன், சாய்லட்சுமி, பாரதிமோகன், ராஜேஸ்வரன், பிரிவு துணைத்தலைவர்கள் தர்மதுரை, போர்வாள்கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.