தாந்தோணிமலையில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாந்தோணிமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-26 18:28 GMT

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாந்தோணிமலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சிவா முன்னிலை வகித்தார்.

மாநில துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி, மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்

ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்திற்கு பதிலாக வாழ்வாதாரத்திற்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்