பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மின்சார வாரிய மேற்பார்வை என்ஜினீயர் அலுவலகம் முன்பு பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் முருகேஷ் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வகையில் அரசாணை-100 அடிப்படையில் முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திட்ட செயலாளர் நாராயணன், கோட்ட செயலாளர் கதிர்வேல், திட்ட பொருளாளர் மணிகண்டன், திட்ட தலைவர் செபஸ்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.