பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம்;
விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு, வீட்டு மனை மற்றும் பட்டா வழங்க வேண்டும், ஓராண்டாக மாதாந்திர குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெறாததை கண்டிப்பது, விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி ஆகிய வட்டங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வரவேண்டிய உதவி தொகைகள் ஆறு மாத காலமாக வழங்கப்படாததை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வில்சன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.