அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
சேத்துப்பட்டில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க ஒன்றிய துணைத்தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். நடராஜன், ஜான், ராகினி, பார்த்திபநாதன், வட்டத்தலைவர் குழந்தைவேலு, அண்ணாமலை, பாபு, முத்துமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட தலைவர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.
இதில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி 3 சதவீதம் வழங்க வேண்டும்.
மருத்துவபடி வழங்க வேண்டும். குடும்ப நலநிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.