மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணை செயலாளர் சுதாகர் முன்னிலை வைத்தார். இதில் தலைமை பேச்சாளர் வாய்மை இளஞ்சேரன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏழை, நடுத்தர மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். 100 மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை உடனே குறைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சீர்காழி நகர செயலாளர் அருண்பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் கல்யாணம், திலகர், மோகன், தங்கராசு, கோபி, சரவணன், சண்முகம், அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராமராஜன் நன்றி கூறினார்.