அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
கோடநாடு வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோடநாடு வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,, தி.மு.க. அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, பன்னீர்செல்வம் பிரிவு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், அ.ம.மு.க. நகர் செயலாளர்கள் அன்புமணி, சரவணன், பொறியாளர் அணி மாவட்ட நிர்வாகி மகேஷ் மற்றும் பன்னீர்செல்வம் பிரிவு மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து, சிவகங்கை நகர் செயலாளர் கே.வி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி
அதேபோல் இளையான்குடியில் இருந்து வடக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜா தலைமையில், அ.ம.மு.க. மாநில சிறுபான்மை செயலாளர் துருக்கி ரபீக் ராஜா, இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரதீபன், ஒன்றிய செயலாளர்கள் கற்குவேல், உதயகுமார், அண்ணாதுரை, ராமசாமி முன்னிலையில் நிர்வாகிகள் 500-க் கும் மேற்பட்டோர் 100-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்கள், கார்களில் பேரணியாக சென்று கலந்து கொண்டனர்.