அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-21 18:45 GMT

வெளிப்பாளையம்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுனந்தாதேவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்க மாநில தலைவர் நாகை செல்வன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் இந்திரா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

பதவி உயர்வு வழங்க வேண்டும்

மாநில அரசின் கொள்கை முடிவு என்று சுகாதார கூட்டமைப்பை சீரழிக்கும் அரசாணை எண்.288 மற்றும் 392-ஐ தேசிய சுகாதார இயக்ககம் கைவிட வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு வாய்ப்பு இன்றி பணிபுரியும் சுகாதார செயலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இடம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு இடத்தை தேர்வு செய்த செவிலியர்களின் இடமாறுதலுக்கான உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்