அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-30 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலையின் சி.ஐ.டி.யூ. செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத் தலைவர் ராமானுஜம், மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை தாலுகா தலைஞாயிறு கிராமத்தில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக கோளாறால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 80 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் ஓய்வூதியர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் பண பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்