வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-18 18:57 GMT

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும். அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும், தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம்அனுமதிக்க வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு தட்டச்சர் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கவி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கீர்த்தனா வரவேற்றார். மாநில செயலாளர் சங்கர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் மாவட்ட துணை தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்