கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேதாரண்யம்:
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், சவுரிராஜன், அவ்வை பாலசுப்பிரமணியன், வேதாரண்யம் நகர செயலாளர் நமச்சிவாயம், நகர துணை செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் திலீபன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.