மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-16 19:05 GMT

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் தாலுகா அலுவலகம் எதிரில், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்து வருகிறது. பால், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராம ஜெயலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்