அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-29 19:02 GMT

அரியலூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்தும், மதுக்கடைகளை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் தெரிவிக்கையில், விஷ சாராயம் குடித்து தமிழகத்தில் 24 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கள்ள சாராயம் விற்கப்படுகிறது. தி.மு.க. அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று கூறியது. ஆனால் மதுபான கூடத்தில் 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது. தஞ்சாவூரில் மதுபாரில் மது குடித்த 2 பேர் இறந்து போனார்கள். பல இடங்களில் பாலியல் வன்முறைகளும் நடைபெறுகிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராமஜெயலிங்கம் உள்பட அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்