அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகளாக இருந்த வேப்பமரத்தை வெட்டிய தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தும் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர்கள் அவ்வைபாலசுப்ரமணியன், சவுரிராஜன், தலைஞாயிறு ஒன்றிய அவைத்தலைவர் அழகப்பன், வேதாரண்யம் நகரச் செயலாளர் நமச்சிவாயம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.