கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க தலைவர் அபிராமி முருகன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்க தலைவர் மேரி ஷீலா, இந்திய கலாசார நட்புறவு கழக மாவட்ட துணை தலைவர் சம்பத்குமார், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் கருப்பசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார், பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனிராஜ், பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.