அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-02-07 19:15 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் பஸ் நிலையம் அருகே இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் திருவேட்டை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரியலூரில் உள்ள அல்ட்ரா டெக் சிமெண்டு ஆலையில் சுமை தூக்கும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நீக்கி வெளியேற்றிவிட்டு, வடமாநில தொழிலாளர்களை நியமித்ததை கண்டிப்பது. மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்களை அதே பணியில் நியமனம் செய்ய வேண்டும். அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர், கட்டுமான தொழிலாளர்களுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணை தலைவர் சிற்றம்பலம் உள்ளிட்ட ஏராளமான இந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்