நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பனப்பாக்கத்தில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-18 19:17 GMT

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடந்த சம்பவத்தை கண்டித்து பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் மோகன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அமிர்தா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரியில் மாணவர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழக அரசு பட்டியல் சமுதாய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்