மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2023-06-07 18:45 GMT

கோத்தகிரி

மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும் பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் பல மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது முற்றுகையிட சென்ற மல்யுத்த வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். காவல் துறையின் இந்த செயலைக் கண்டித்தும், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மேடை ஆகியவற்றின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்த ராஜ், துணை செயலாளர் வெங்கட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மண்ணரசன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் யோகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுக்கா செயலாளர் மணிகண்டன், ரத்த தான நண்பர்கள் குழு செல்வம் ஆகியோர் பேசினர். இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும், இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்த வீராங்கனைகளுக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்