விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-21 18:41 GMT

குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகே சொத்து வரி, மின்கட்டணம், பால்விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர அவைத்தலைவர் ஆர்.கே.அன்பு, நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன், நகர பொருளாளர்  தனஞ்செயன், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி சுந்தரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்பாஷா, நகர துணை செயலாளர் அமுதா, மாவட்ட பிரதிநிதிகள் சலீம், அட்சயா வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன், ஒன்றிய செயலாளர் வி.ராமு, டி.சிவா, பொகளூர் பிரபாகரன், சீனிவாசன், ஆனந்தன், மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, வழக்கறிஞர் கே.எம்.பூபதி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்