பெட்ரோல் டீசல், விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல், விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உயர் மட்டக் குழு உறுப்பினர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சின்ன பண்ணை செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைத்திட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.