மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-29 17:47 GMT

அரியலூர் அண்ணா சிலை அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் திருமானூர் ஆறுமுகம், துணைத்தலைவர் சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்