கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-26 18:32 GMT

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினருடன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பெரம்பலூர் வட்டார கிளையினர் சேர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணல் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தூத்துக்குடி மாவட்டம், கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்யவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு பணம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன்பு அந்தந்த வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்