சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க. சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து கொடைரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தே.மு.தி.க. சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதன்படி திண்டுக்கல் மாவட்ட தே.மு.தி.க. சார்பில், கொடைரோடு சுங்கசாவடியில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திண்டுக்கல் மாநகர செயலாளர் மாதவன், மாவட்ட நிர்வாகிகள் முத்துக்காளை, நித்யா முருகேந்திரன், ஜெர்மன் ராஜா, கலைச்செல்வன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் பழனி (வடக்கு), வெள்ளைச்சாமி (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.