தூத்துக்குடியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக கவர்னர் செயல்படுவதாகவும், அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை கண்டித்தும் காங்கிரசார் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஐ.என்.டி.யு.சி மாநில பொதுசெயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூத்துக்குடி பூபாலராயர்புரம் மெயின் ரோட்டில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.