நூதன முறையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காய்கறி மாலைகள் அணிந்து நூதன முறையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-20 17:22 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் முன்னிலை வகித்தார்.

காய்கறிகளின் விலை உயர்வை குறிக்கும் வகையில் தக்காளி, வெங்காயம், பூண்டு, கேரட், மிளகாய், அவரைக்காய், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்களும் காய்கறி மாலையை அணிந்திருந்தனர்.

மேலும் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ராமு, முன்னாள் எம்.எல்.ஏ. லோகநாதன், மாவட்ட இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி, ஒன்றிய செயலாளர்கள் எம்.ராகவன், கே.எஸ்.சுபாஷ், குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி, பகுதி செயலாளர்கள் எஸ்.குப்புசாமி, பி.நாராயணன், அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.பி.ரமேஷ், அருணா விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்