ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் நேற்று தபால் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலாளர் கார்த்திக், நிர்வாகி மணிகண்டன், மாதர் சங்க தாலுகா செயலாளர் ஆரோக்கிய நிர்மலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.