சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-01 18:45 GMT

ஆர்ப்பாட்டம்

பாலியல் புகாரில் சிக்கி உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஜன் சரண்சிங் எம்.பி.யை கைது செய்ய வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்கக்கோரியும் நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

எலச்சிபாளையம்,பள்ளிபாளையம்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சுரேஷ், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், கூட்டுறவு இயக்குனர் மாரிமுத்து, வார்டு உறுப்பினர் ஜோதி, வி.ஐ.பி. தலைவர்கள் ரமேஷ், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பள்ளிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு. சார்பில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஜன் சரண்சிங் எம்.பி. யை கைது செய்ய வேண்டும் என்பது கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் கொடுமை செய்த எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த பல நாட்களாக விளையாட்டு வீரர்கள் டெல்லியில் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் அசோகன் சிறப்புரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்