ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-30 19:00 GMT

எட்டயபுரம்:

திருச்சி மாவட்டம் துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் மீது மணல் கொள்ளையில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறையினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு துணை வட்டாட்சியர், அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். உடனடியாக வருவாய் ஆய்வாளரை தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்