சத்துணவு பணியாளர் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்

சத்துணவு பணியாளர் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2023-05-26 18:45 GMT

சிவகங்கை

தமிழக அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நவநீதம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை இணைத்து சத்துணவு பணியாளர் மூலம் செயல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில செயலாளர் ராஜ்குமார், மாநில துணைத்தலைவர் உடையார், ஆலோசகர் அரியாத்தி, மாவட்ட செயலாளர், அங்காள ஈஸ்வரி, பொருளாளர் கவிதா, ஒன்றிய தலைவர்கள் சத்யன் (திருப்புவனம்), அமுதா (இளையான்குடி), மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜீவா, ஜோஸ்பின், ராஜாத்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய செயலாளர் செல்லம்மாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்