பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-21 06:45 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணாசிலை எதிரே, பா.ஜனதா மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி விமலா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவி மஞ்சுளா, ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர்கள் சிவபிரகாசம், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில மகளிரணி தலைவர் உமாரதிராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், மாவட்ட துணை பொது செயலாளர்கள் மீசைஅர்ஜூனன், கோவிந்தராஜ், கவியரசு, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்