ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக ஊழியர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் போஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது 2017 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு சேம நல நிதி வழங்க வேண்டும். 2022 மே முதல் நவம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். கல்வித்தகுதியின் அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.