விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-14 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் அருகே, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய உதவி செயலாளர் குமார் தலைமை தாங்கினார். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, விசைத்தறி தொழிலில் பணிபுரியும், அனைத்து பிரிவு ஆண் பெண் தொழிலாளர்களுக்கும் 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். மே 21-ந் தேதிக்குள் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன், விசைத்தறி தொழிலாளர் சங்க பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஒன்றிய தலைவர் அசன், ஒன்றிய பொருளாளர் முருகேசன், விசைத்தறி தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக விசைத்தறி தொழிலாளர் சங்கத்திற்கும், உரிமையாளர் சங்கத்திற்கும் நேற்று முன்தினம் கூலி உயர்வு குறித்து 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிமையாளர் சங்கத்தினர் 6 சதவீதம் உயர்வு தருவதாக கூறினர். தொழிலாளர் சங்கத்தினர் 20 சதவீதம் வேண்டும் என தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. 21-ந் தேதிக்குள் ஒப்பந்தம் ஏற்படவில்லை எனில் 22-ந் முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்