காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஓசூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-10 18:45 GMT

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு ஓசூரில் நேற்று மெழுகுவர்த்தி எந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் - தளி சாலையில் பட்டாளம்மன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநகர தலைவர் தியாகராஜன், வெங்கடேஷ், பவ்யா, லலிதா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்