ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-06 19:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் தேவேந்திரி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகரசெயலாளர் ஜெயக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டா வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்