பா.ஜனதாவினா் ஆர்ப்பாட்டம்

ஓமலூரில் பா.ஜனதாவினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-03 20:09 GMT

ஓமலூர்

காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஓமலூரில் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் மகிழன், பூபதி, கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா நிர்வாகி சங்கர் படுகொலையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் நிர்வாகிகள் கோஷமிட்டனர்.

இதில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், ஓமலூர் மண்டல தலைவர் கிருஷ்ண தேவராஜ், ஓமலூர் மேற்கு ஒன்றிய தலைவர் முருகன், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் முனுசாமி, மகளிர் அணி மாவட்ட தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்